ரஜினியை அடுத்து கமல்ஹாசனை சந்தித்த போராட்டக்கார்ரகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லிம் அமைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ரஜினியை அடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசனை ஒரு சில இஸ்லாமிய அமைப்பினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று கமல்ஹாசன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேசினார். இவர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு தங்கள் ஆதரவு வேண்டுமென்று கமல்ஹாசனை கேட்டுக் கொண்டனர். எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாகதான் இருப்பேன் என்று உறுதி கூறினார்.
போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடத்திட வேண்டும். அதே நேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்து விடக் கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார். கமலின் கருத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து தங்கள் ஒத்துழைப்பு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கமல்ஹாசனுக்கு இருக்கும் என தெரிவித்தனர்.
Makkal Needhi Maiam Party President Mr @ikamalhaasan Meeting with Various Muslim Associations.#MakkalNeedhiMaiam pic.twitter.com/7vFwSeW3CX
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments