ரஜினியின் 'பாபா'வை அடுத்து ரீரிலீஸாகும் எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் அடுத்ததாக எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படம் ஒன்று விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1974-ஆம் ஆண்டு எம்ஜிஆர், லதா நடித்த எஸ்எஸ் வாசனின் மகன் எஸ்எஸ் பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சிரித்து வாழவேண்டும்’. எம்ஜிஆர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லதா நடித்து இருந்தார் என்பதும் வில்லனாக நம்பியார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1978ஆம் ஆண்டு வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் வாலி, புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சிரித்து வாழவேண்டும்’ என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருவதாகவும் இந்த படம் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இந்த தகவல் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout