ரஜினி, நெல்சனை அடுத்து அனிருத்துக்கும் கிஃப்ட் கொடுத்த கலாநிதி மாறன்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததை அடுத்து ரஜினிகாந்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபத்தில் பங்கு கொடுத்த கலாநிதி மாறன் அவர்கள், ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர காரையும் பரிசாக அளித்தார். அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோர்களை அடுத்து அனிருத்துக்கும் கலாநிதி மாறன் கிப்ட் கொடுத்தார். அவர் அனிருத்துக்கு மிகப்பெரிய தொகை கொண்ட செக் கொடுத்த புகைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’ஜெயிலர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று அனிருத்தின் அட்டகாசமான இசை என்பதும் அதனால் தான் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். மேலும் அனிருத்துக்கும் ஆடம்பர கார் பரிசளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Mr.Kalanithi Maran congratulated @anirudhofficial and handed over a cheque, celebrating the mammoth success of #Jailer#JailerSuccessCelebrations pic.twitter.com/GRbiSKcuW1
— Sun Pictures (@sunpictures) September 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments