close
Choose your channels

ரஜினி, அஜித், எஸ்கே: தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைகிறதா இன்னொரு பிரபல நடிகரின் படம்?

Wednesday, July 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி தினத்தில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு பிரபல நடிகரின் படமும் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த தேதியில் சூர்யாவின் ‘கங்குவா’ படம் வெளியாவதால் ’வேட்டையன்’ தீபாவளிக்கு தள்ளி போவதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித் நடித்த ’விடாமுயற்சி’ படமும் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படமும் தீபாவளி நாளை குறி வைத்துள்ளது.

இந்த நிலையில் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் படங்களை அடுத்து ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

என்னதான் தீபாவளி விடுமுறை என்றாலும் நான்கு பிரபல நடிகர்கள் போட்டியில் இறங்குவது சந்தேகம் தான் என்றும் கடைசி நேரத்தில் எந்தெந்த திரைப்படங்கள் பின்வாங்கும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment