'ராயன்' வெற்றியை அடுத்து 'வேட்டையன்' களத்தில் இறங்கிய துஷாரா விஜயன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்தில் துஷாரா விஜயன் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக அவர் ’வேட்டையன்’ படத்தில் டப்பிங் பணிக்காக களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ திரைப்படத்தில் துஷாரா விஜயன் அவருடைய தங்கை கேரக்டரில் நடித்த நிலையில் அவருடைய நடிப்பு சூப்பராக இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்பதும் முன்னணி விமர்சகர்களும் அவருடைய நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ’ராயன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து தற்போது அவர் ’வேட்டையன்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் தன்னுடைய பகுதிக்கான டப்பிங் பணியை அவர் தொடங்கியுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’ராயன்’ திரைப்படம் போலவே ’வேட்டையன்’ திரைப்படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது
அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Step behind the scenes with actress @officialdushara at the VETTAIYAN 🕶️ dubbing session. 🎙️ Capturing the dedication and passion she brings to her role! 🎭#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/7L227o77zc
— Lyca Productions (@LycaProductions) August 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com