close
Choose your channels

மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் சமந்தா?

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஆடிய ’ ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் டான்ஸ் பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவை அடுத்து ரெஜினா, தமன்னா உள்பட மேலும் சில முன்னணி நடிகைகள் ஒருசில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தெலுங்கு திரை உலகின் இன்னொரு மாஸ் நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லிகர்’ என்ற திரைப்படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐட்டம் டான்ஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் விஜய் தேவரகொண்டா படத்திலும் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment