'ஓ சொல்றியா' பாடலை அடுத்து ஆண்ட்ரியா பாடிய அடுத்த பாடல்!

  • IndiaGlitz, [Tuesday,April 05 2022]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடினார் என்பதும் இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடிய நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ஓ சொல்றியா’ பாடலை அடுத்து நடிகை ஆண்ட்ரியா தற்போது மற்றொரு பாடலை பாடியுள்ளார். நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘வெப்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடலை கார்த்திக் ராஜா கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.