close
Choose your channels

'PS2' படத்தை அடுத்து 'P2' படம்.. நீண்ட இடைவெளிக்கு பின் களமிறங்கும் தேவா..!

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ பாகம் 2 திரைப்படம் தான் ’PS2’ என்ற தலைப்பில் வெளியானது என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’PS2’ பாடத்தை அடுத்து ’P2’ என்ற பெயரில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்த நடிகர் மனோஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘யாத்திசை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சித்து குமரேசன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத் ராம், தீபா உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார். இந்த படத்தை சிவம் என்பவர் இயக்க உள்ள நிலையில் அவர் இந்த படம் குறித்து கூறியபோது ’திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படம் நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது என்றும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment