'PS 2' இசை வெளியிட்டு விழா முடிந்ததும் வெளிநாடு பறக்கும் கமல்ஹாசன்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதை அடுத்து இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த படத்தின் டிரைலரை வெளியிடுகிறார். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்தவுடன் அவர் தாய்லாந்து நாட்டுக்கு செல்ல இருப்பதாகவும் அங்கு ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் அங்கிருந்து தென்னாப்பிரிக்கா செல்வதாகவும் அங்கு மாஸ் ரயில் ஸ்டண்ட் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் 25 நாட்கள் படப்பிடிப்பை முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 

More News

அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்டை கொடுத்த ஆர்யா.. செம மாஸ் ஸ்டில் ரிலீஸ்..!

நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

முதல்முறையாக அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைக்கு ஆளான பிக்பாஸ் நடிகர்.. முன்னணி நடிகை மீது குற்றச்சாட்டு..!

ஹாலிவுட் திரையுலகம் முதல் கோலிவுட் திரை உலகம் வரை நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற தொல்லைக்கு ஆளாவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன என்பதும் அதுமட்டுமின்றி சீரியல் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை

என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் மகிழ்ச்சி! ஜிவி பிரகாஷ் தங்கை விளக்கம்..!

 இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பதே அனைத்து பாடகர்களின் லட்சியமாக இருக்கும் நிலையில் இளையராஜா தானாக முன்வந்து கொடுத்த பாடகி வாய்ப்பை தான்

சன் டிவி 'டாப் 10 மூவீஸ்' சுரேஷ் குமாருக்கு கல்லூரி செல்லும் வயதில் மகளா? வைரல் புகைப்படங்கள்..!

 இப்பொழுது எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தாலே அவர்கள் திரைப்பட விமர்சகர்களாக மாறிவிடும் நிலையில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் சன் டிவியில் டாப் 10 மூவிஸ் என்ற

உங்கள் எனர்ஜி அற்புதம், எல்லா இடத்திலும் நீங்க தான் இருக்கீங்க.. கார்த்தி புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா?

எல்லா இடத்திலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள், உங்கள் எனர்ஜி அற்புதம் என்று பிரபல நடிகர் ஒருவரை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.