பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பின் 'கங்குவா' தான்.. வேற லெவல் டெக்னாலஜி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகை பொருத்தவரை ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’லியோ’ படங்கள் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தையும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
‘கங்குவா’ படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக உள்ளது என்பதும் பத்து மொழிகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் 3டி டெக்னாலஜியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3டி டெக்னாலஜி, 10 மொழிகள், ஐமேக்ஸ் தொழில்நுட்பம் என வேற லெவலில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பிளாஷ்பேக் வரலாற்று காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும் என்றும் ஐமாக்ஸ் வர்ஷனில் இந்த படத்தை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைந்த இந்த படம் மிகப்பெரிய சாதனை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவர வாய்ப்புள்ளது. குறிப்பாக வரும் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout