'PS 1' படத்தை அடுத்து மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் ஆடியோ விழா?

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் என்பதும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் இசை விழாவை அடுத்து இன்னொரு திரைப்படத்தின் ஆடியோ விழாவில் ரஜினி, கமல் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ’மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் ’மாமன்னன்’ என்ற டைட்டிலே அவரது கேரக்டர் தான் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

தேனி ஏசுவர் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது