பிரியங்கா மோகனை அடுத்து இன்னொரு நாயகி: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அதே போல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சந்தீப் கிஷான்நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிகை நிவேதிதா சதீஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ’சில்லுக்கருப்பட்டி’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Welcome onboard @nivedhithaa_Sat ???????? @dhanushkraja #CaptainMiller #NivedhithaaSathish
— Arun Matheswaran (@ArunMatheswaran) September 20, 2022
@ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash @SathyaJyothi @CaptainMilIer pic.twitter.com/TgRhmGSc48
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments