இந்த ஒரு வருடம் மிகவும் சவாலானது.. செர்பியா சர்ச்சில் பிரார்த்தனை செய்த பின் சமந்தாவின் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

கடந்த ஒரு வருடம் தனக்கு மிகவும் சவாலானது மற்றும் கடினமானது என்று செர்பியா சர்ச்சில் பிரார்த்தனை செய்த பின் சமந்தா உருக்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்ற சமந்தா அதன்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் அவர் கூறிய போது ’கடந்த வருடத்தில் எனக்கு வித்தியாசமான நோய் கண்டறியப்பட்டு அதனுடன் பல போராட்டங்கள் நடந்தது. என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன் என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது.

ஆனால் அதே நேரத்தில் பிரார்த்தனை, பூஜைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் ஆகியவை என்னை வலிமையாகவும் அமைதியாகவும் மாற உதவியது. எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கற்றுக் கொடுத்த ஆண்டுதான் கடந்த ஆண்டு. நாம் ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மீதி உள்ளவற்றை விட்டு விட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஆண்டு.

மேலும் நாம் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும், சில நேரங்களில் வெற்றி நம்மை நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் முன்னோக்கி செயல்படுவதே ஒரு வெற்றிதான். மீண்டும் தானாக சரியாகும் என்று நாம் காத்திருக்க கூடாது, கடந்த காலத்தில் உள்ள சோகங்களையும் தோல்வியையும் நினைத்து மூழ்கி விடக்கூடாது, நாம் நேசிப்பவர்களிடம் நம்மை நேசிப்பவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும். வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது, உங்களில் பலர் மிக கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

தெய்வங்கள் தாமதம் செய்யலாம், ஆனால் கண்டிப்பாக அவர்கள் கைவிட மாட்டார்கள், அமைதி அன்பு மகிழ்ச்சி மற்றும் வலிமையை தேடுபவர்களுக்கு ஒருபோதும் தெய்வம் கைவிடாது’ என்று பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'பாபா பிளாக் ஷிப்': குறுகிய நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பெற்று சாதனை..!

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பின் குறுகிய நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.

1 பந்துக்கு 18 ரன்களை கொடுத்து மோசமான சாதனை படைத்த சம்பவம்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்

நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஊர் சுற்றும் வருண் தேஜ், லாவன்யா திரிபாதி… வைரல் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர், நடிகைகளாக இருந்து தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் வருண் தேஜ்

இந்தியா முழுக்க பைக் டிராவல்… எல்லைத் தாண்டி இதயங்களை நெகிழ வைத்த இளைஞர்!

எல்லைகளுக்கு இடையேயான வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு நட்பை வளர்க்க வேண்டும் எனும் நோக்கில் இந்தியா முழுவதும் பைக் டிராவல் செய்த பாகிஸ்தான் இளைஞர் தற்போது அனைவரது நெஞ்சங்களையும் உருக வைத்துள்ளார்

சுந்தர் சியின் 'தலைநகரம் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அதே நாளில் மேலும் 3 படங்கள் ரிலீஸ்..!

சுந்தர் சி நடித்த 'தலைநகரம் 2' என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.