close
Choose your channels

பூவையாரை அடுத்து சொந்த கார் வாங்கிய இன்னொரு விஜய் டிவி பிரபலம்!

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான 14 வயது பூவையார் சொந்த கார் வாங்கியதை அடுத்து தற்போது இன்னொரு விஜய் டிவி பிரபலமும் கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து கார் வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மைனா நந்தினி, சரத், புகழ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் ஆகியோர் கார் வாங்கியுள்ளனர்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமாகி அதன் பின்னர் விஜய் நடித்த ’பிகில்’ ’மாஸ்டர்’ மற்றும் விக்ரம் நடித்த ’கோப்ரா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த பூவையார் சொந்த கார் வாங்கியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் பூவையாரை அடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’மௌனராகம்’ என்ற சீரியலில் நடிக்கும் நடிகை ரவீனா புதிய கார் வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த காரை அவரது அம்மா அவருக்கு வாங்கி கொடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

என்ன ஒரு நாள் அது! 10.10.2022 என்ற இந்த நாளில் எனக்கு ஆச்சரியங்கள், சிரிப்பு, காதல், சிலிர்ப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைந்தது. ஏனெனில் இன்று என் அம்மா எனக்கு பரிசாக MG HECTOR PLUS கார் வாங்கி கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அவரை என் அம்மா என்று அழைப்பதில் நான் எப்போதும் பெருமைப்படுவேன். அம்மா நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்கும். என் வாழ்வில் நீ இருப்பதற்கு நன்றி. என்னை பொருத்தவரை நீங்கள் தான் மிகச்சிறந்த நபர்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment