close
Choose your channels

10 நாட்கள் வித்தியாசத்தில் ஜோதிகாவை முந்திய கீர்த்திசுரேஷ்!

Friday, May 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாக உள்ளது என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷின் ’பெங்குவின்’ படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ’பெங்குவின்’ என்ற திரைப்படம் கடந்த சில நாட்களாக அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோதிகாவின் படத்தை விட பத்து நாட்கள் முன்னரே கீர்த்திசுரேஷின் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகையான வித்யாபாலன் நடித்த ’சகுந்தலா தேவி’ என்ற திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று அமேசான் அறிவித்துள்ளது. மேலும் கன்னட திரைப்படமான ‘லா’ என்ற படம் ஜூன் 26ஆம் தேதியும் இந்தி திரைப்படமான ’குலாபா சிடாபோ’ என்ற படம் ஜூன் 12ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னட திரைப்படமான ‘பிரெஞ்ச் பிரியாணி, மலையாள திரைப்படமான ‘சுஃபியும் சுஜாதாவும்’ என்ற் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஓடிடி பிளாட்பாரத்தில் இந்த மாதமும் அடுத்த மாதமும் பல முக்கிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment