பொங்கலுக்கு பின் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்.. ரசிகர்களுக்கு குஷி தான்..!

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

பொங்கல் விருந்தாக நாளை தனுஷின் ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’, அருண் விஜய்யின் ’மிஷின் சாப்டர் ஒன்’ மற்றும் விஜய் சேதுபதியின் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து பொங்கலுக்கு பின்னர் அடுத்தடுத்து பிரபலங்களின் படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக குடியரசு தின விருந்தாக ஆர்ஜே பாலாஜி நடித்த ’சிங்கப்பூர் சலூன்’ அசோக் செல்வன் நடித்த ’ப்ளூ ஸ்டார்’ மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடித்த ’ஃபைட்டர்’ மோகன்லால் நடித்த ’மலைக்கோட்டை வாலிபன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இதையடுத்து அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ ரக்சன் நடித்த ’மறக்குமா நெஞ்சம்’ மற்றும் விதார்த் நடித்த ’டெவில் ’ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதனை அடுத்து பிப்ரவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் வெளியாக உள்ளது

மேலும் அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’, சுந்தர் சியின் ‘அரண்மனை 4’ ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளதால் விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.