பொங்கலுக்கு பின் ரிலீசாகும் படங்கள்.. பா ரஞ்சித் - ஆர்ஜே பாலாஜி படங்கள் ஒரே நாளில் மோதல்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொங்கல் விருந்தாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ அருண் விஜய் நடித்த ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நான்கு பிரபலங்களின் படங்கள் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ளதை அடுத்து சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ’ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி அதாவது பொங்கல் முடிந்த இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்கிறது.
இதையடுத்து அதே ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இன்னொரு படம் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான ’சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.
மேலும் மோகன்லால் நடிப்பில் உருவான ’மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படமும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கலுக்கு அடுத்த வாரம் எந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும் ஜனவரி 25ல் தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் மோகன்லாலின் ’மலைக்கோட்டை வாலிபன்’ ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில படங்கள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#MalaikottaiVaaliban the eagerly awaited @mohanlal period action fantasy drama releases on January 25!! pic.twitter.com/KL3r2CBBYD
— AGS Cinemas (@agscinemas) January 2, 2024
@SakthiFilmFctry present our #BlueStar in theatres all over India✨ Happy and grateful to partner with @sakthivelan_b 🌸🌸🔥 pic.twitter.com/ebjEPvnmHj
— pa.ranjith (@beemji) January 5, 2024
#SingaporeSaloon from Jan 25th..! ❤️ @RedGiantMovies_ @VelsFilmIntl #ThaiPoosam #RepublicDay Weekend 🔥 pic.twitter.com/UWxjigEN81
— RJ Balaji (@RJ_Balaji) January 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments