ஓடிடிக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம்: தெறிக்கவிட்ட ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பதே நடைமுறை. ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று திரையரங்கில் வெளியாகி இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
மதுரை திரையரங்கில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். சூர்யாவின் புதிய திரைப்படம் ரிலீஸின்போது எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடி மேளதாளங்கள் வாசித்து தியேட்டரை தெறிக்க விட்டனர்.
குறிப்பாக திரைஅரங்கில் ’சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் விசிலடித்து தெறிக்கவிட்டதாக மதுரையில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ’சூரரைப்போற்று’ திரைப்படம் மதுரை தியேட்டரில் வெளியானது போல் மற்ற நகரங்களிலும் வெளியாக வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
#SooraraiPottruInTheatres ??
— Deva (@deva_tn60) February 4, 2022
SP re release Celebration at Madurai ?? @Suriya_offl
??@rajsekarpandian @Madurai6Selva @Hari_Socialist @Ghouse_offl @maduraimanojsfc pic.twitter.com/duQrRZ4Uc6
Massive celebration by @MaduraiSFC_ ???? #SooraraiPottruRerelease @Suriya_offl @Hari_Socialist @Ghouse_offl @Madurai6Selva @rajsekarpandian pic.twitter.com/e4uExvLkTY
— Deva (@deva_tn60) February 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments