ஓடிடிக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம்: தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பதே நடைமுறை. ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று திரையரங்கில் வெளியாகி இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

மதுரை திரையரங்கில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். சூர்யாவின் புதிய திரைப்படம் ரிலீஸின்போது எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடி மேளதாளங்கள் வாசித்து தியேட்டரை தெறிக்க விட்டனர்.

குறிப்பாக திரைஅரங்கில் ’சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் விசிலடித்து தெறிக்கவிட்டதாக மதுரையில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. ’சூரரைப்போற்று’ திரைப்படம் மதுரை தியேட்டரில் வெளியானது போல் மற்ற நகரங்களிலும் வெளியாக வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

More News

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த நடிகரா?

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடரும் கொலைகள், தீராத மர்மம்,  தூங்கா தேடல்: விமலின் 'விலங்கு' டிரைலர்

விமல் நடித்த வெப் தொடரான 'விலங்கு' வரும் 18 ஆம் தேதி ஜீ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் 'விலங்கு'

விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' டிரைலரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!

விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

10 வருடம் நிச்சயமாக ஒரு மைல்கல்தான்… திருமண நாளில் விஜய் பட நடிகை நெகிழ்ச்சி!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளுள் ஒன்றான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் நடிகை ஜெனிலியா இருவரும் நேற்று தங்களது 10 ஆவது

இளம் ஹீரோவின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் இளம் ஹீரோவின் அடுத்த திரைப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.