ஆஸ்காரை அடுத்து புக்கர் .. பட்டியலில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளரின் புத்தகம்..!
- IndiaGlitz, [Wednesday,March 15 2023]
தமிழ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று நாட்டிற்க்கே பெருமை சேர்த்த நிலையில் தற்போது தமிழ் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் புக்கர் விருதுக்கு பட்டியலிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
2023 ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் பரிசுக்கான பட்டியலில் பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் பதிப்பிக்கப்பட்ட புனைவு நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலுக்கு புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் இந்த விருது அறிவிக்கப்படும் நிலையில் இந்த விருதை பெரும் எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் பவுண்ட் பரிசு தொகைவழங்கப்படும்.
உலக புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் ஆகியவர்கள் கொண்ட குழுவின் மூலம் புக்கர் விருதுக்கு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் புக்கர் விருதுக்கு முன்மொழியப்பட்ட நிலையில் 13 புத்தகங்கள் தற்போது நடுவர் குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து 6 புத்தகங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அதன் பின் அதிலிருந்து ஒரு புத்தகம் தேர்வு செய்யப்பட்டு புக்கர் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 13 நூல்கள் கொண்ட பட்டியலில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் எழுதிய ’பூக்குழி’ என்ற நாவலுக்கு தான் இந்த விருதுக்காக பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தமிழ் பெண்கள் ஆஸ்கார் விருதை பெற்ற நிலையில் தமிழ் எழுத்தாளர் புக்கர் விருதை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.