30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில், ‘சென்னை தாம்பரம் பகுதியில் மட்டும் 6 மணி நேரத்தில் 146 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், இதுவொரு மிகச் சிறந்த மழை என்றும், அதேபோல் சென்னையின் தெற்கு பகுதியிலும், புறநகர் பகுதிகளிலும்தான் நல்ல மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இனிமேல்தான் கனமழை காத்திருக்கிறது என்றும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருந்தாலும் அதிகாலை அல்லது இரவில்தான் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றும், பகலில் சூரியன் சுட்டெரித்தாலும் கவலை வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்

நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

கமல்ஹாசன் சிகிச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு!

உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால்

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது

வெப் சீரீஸ் லிஸ்ட்டில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

திருமணம் கணவரோடு, முதலிரவு மாமனாருடனா? அதிர்ச்சி அடைந்த நெல்லை பெண்

விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.