30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில், ‘சென்னை தாம்பரம் பகுதியில் மட்டும் 6 மணி நேரத்தில் 146 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், இதுவொரு மிகச் சிறந்த மழை என்றும், அதேபோல் சென்னையின் தெற்கு பகுதியிலும், புறநகர் பகுதிகளிலும்தான் நல்ல மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இனிமேல்தான் கனமழை காத்திருக்கிறது என்றும் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருந்தாலும் அதிகாலை அல்லது இரவில்தான் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றும், பகலில் சூரியன் சுட்டெரித்தாலும் கவலை வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Vechi senjing rains possible on 30th November, 1st and 2nd December, 2019 across TN coast including KTCC belt either one of the night to mornings expecting atleast one super spell before the villan dry air moves into TN coast for short period. https://t.co/cBCQV46619 pic.twitter.com/dnGTSwy08Y
— TamilNadu Weatherman (@praddy06) November 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com