இன்னும் ஒரு வாரம் தான்.. 9 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணைந்த ஸ்ருதிஹாசன்..!

  • IndiaGlitz, [Wednesday,July 24 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடி இருக்கும் நிலையில் இந்த பாடல் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’புலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடித்த விஜய், ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பதும் ‘ஏண்டி ஏண்டி என்னை வாட்டுர’ என்ற இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் ஒரு மெலடி பாடலை பாடி இருக்கும் நிலையில் இந்த பாடல் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ‘கோட்’ படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.