9 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 'வாணி ராணி' சூர்யா- டிம்பிள்.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்த ’வாணி ராணி’ என்ற சீரியல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த சீரியலில் ராதிகா நடித்த வாணி, ராணி என்ற இரட்டை வேட கேரக்டர்களை அடுத்து மிகவும் பிரபலமான கேரக்டர் என்றால் அது நீலிமா இசை நடித்த டிம்பிள் என்ற கேரக்டர் என்பது இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தற்போது ’வாணி ராணி’ சீரியலில் நடித்த சூர்யா மற்றும் டிம்பிள் கேரக்டரில் நடித்த அருண்குமார் மற்றும் நீலிமா இசை, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’வானத்தைப்போல’ சீரியலில் என்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

’வானத்தைப்போல’ சீரியலில், அருண்குமார், டிம்பிள் ஆகிய இருவரும் கௌதம் மற்றும் திவ்யா என்ற கேரக்டர்களில் என்ட்ரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அருண்குமார் மற்றும் நீலிமா இசை தங்களது சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளனர்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ’வாணி ராணி’ ஜோடி சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’வானத்தைப்போல’ சீரியலில் என்ட்ரியாக உள்ளதை அடுத்து இந்த சீரியலுக்கு இன்னும் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.