9 வருடங்களாக முடங்கியிருந்த நயன்தாரா படம் விரைவில் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் 9 ஆண்டுகளாக முடங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

நயன்தாரா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படம் ’ஆரடுகுலா புல்லட்’. இந்த படம் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. இந்த படத்தை முதலில் பூபதிபாண்டியன் என்ற தமிழ் இயக்குனர் ’ஜெகன்மோகன் ஐபிஎஸ்’ என்ற பெயரில் இயக்க முடிவு செய்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து இந்த படத்தை கோபால் என்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் இயக்கினார்

இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்சாருக்கு சென்று ‘யூஏ’ சான்றிதழ் பெற்றது. இருப்பினும் பொருளாதார பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்தது. 2020ஆம் ஆண்டு இந்த படம் டிஜிட்டலில் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் இதனை அடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது, கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.