9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான தொடரி என்ற திரைப்படம் உருவான நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவர் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இட்லி கடை என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிந்துள்ளது.

இந்த நிலையில் இட்லி கடை படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தனுஷ் இன்னொரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடரி படத்திற்குப் பிறகு, 9 ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையே உள்ள இணைப்பை வைத்து, இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, தனுஷ் குபேரா மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

More News

'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகரின் மனைவி கர்ப்பம்.. 5வது மாத நலங்கு விழா புகைப்படங்கள்..!

சரவணன் மீனாட்சி உள்பட  பல சீரியல்களில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாகி உள்ளதை அடுத்து ஐந்தாவது மாத நலங்கு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும்

'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. க்யூட் வீடியோ வைரல்..!

'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கங்குவா' படத்தின் அனைத்து மொழிகளிலும் சூர்யா வாய்ஸ்.. எப்படி தெரியுமா?

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம், தமிழ் உட்பட சுமார் 10 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் சூர்யா குரல் திரையில் ஒலிக்க என தகவல் வெளியாகியுள்ளது.