நீட் அறிக்கையை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யா நேற்று இரவு காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கையை பெரும்பாலான திரையுலகினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கையின் பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு வீட்டில் ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும். இன்றைய பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களுடைய கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றி விடலாம் என்று கூறியுள்ளார்
மேலும் ’ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்’ என்று அந்த டுவிட்டில் கூறிய சூர்யா, கல்வியை பாதியில் விட்ட மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அகரம் பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளனர் என்றும் இதுவரை வந்த 3030 விண்ணப்பங்கள் தன்னார்வலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது என்றும் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் அகரம் மூலம் படிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ‘சூரரை போற்று’ படத்தில் கிடைத்த வருமானத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உள்பட சமூக சேவைக்காக அவர் ரூ.3.5 கோடி ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்...#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments