close
Choose your channels

நயன்தாரா படத்தை அடுத்து நேரடி ஓடிடிக்கு வருகிறதா கமல்ஹாசன் படம்?

Thursday, October 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா நடித்து வரும் ’டெஸ்ட்’ என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் அடுத்த படமும் நேரடியாக ஓடிடிக்கு வர இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் வசூலும் குறைவாகவே இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ’இந்தியன் 2’ படத்தின் அடுத்த பாகமான ’இந்தியன் 3’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த படம் தான் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படம் தோல்வி காரணமாக, ’இந்தியன் 3’ படத்தை வாங்க முன்வந்துள்ள விநியோகஸ்தர்கள் குறைந்த விலைக்கு கேட்பதாகவும், இதனால் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியன் 2’ படத்தை விட, ’இந்தியன் 3’ படத்தை மிக அதிகமாக எதிர்பார்ப்பதாக கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment