'ஜெண்டில்மேன் 2' படத்தில் நயன்தாராவை அடுத்து இணைந்த இன்னொரு நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் நாயகியாக பிரபல மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் எம்எம் கீரவாணி இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே .
19 ஆண்டுகள் கழித்து உருவாகும் ’ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தற்போது இன்னொரு நாயகி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தான் பிரியா லால். இவர் பிரிட்டனைச் சேர்ந்த இந்தியர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமேன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout