நயன்தாராவை அடுத்து இன்னொரு நடிகையை பாலிவுட்டுக்கு அழைத்து செல்லும் அட்லி..!

  • IndiaGlitz, [Tuesday,July 18 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ’ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் அட்லி அடுத்ததாக ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் இன்னொரு தமிழ் நடிகையை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ‘தெறி’ திரைப்படம் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியானது என்பதும் விஜய் வேடத்தில் வருண் தவான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தாவின் கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் அட்லி, தென்னிந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்த நயன்தாராவை பாலிவுட் அழைத்துச் சென்ற நிலையில் அடுத்ததாக ‘தெறி’ ஹிந்தி ரீமேக் மூலம் கீர்த்தி சுரேஷை பாலிவுட்டுக்கு அழைத்து செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.