நயனை அடுத்து இன்னொரு பிரபல நடிகையின் கல்யாண வீடியோ.. இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Tuesday,November 26 2024]

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வீடியோ வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே அந்த வீடியோவுக்கு விளம்பரமாக மாறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாகசதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமை 25 கோடிக்கு வாங்கியதாக தகவல் இருந்த நிலையில், அதைவிட இருமடங்கு தொகைக்கு நாகசைதன்யா - சோபிதா துலிபாலா திருமண வீடியோ விலை போய் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவியுள்ளது.

More News

சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” வெற்றிவிழா மற்றும் நன்றி அறிவிப்பு விழா!!

இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன்

படம் வெளியாக 10 நாட்கள் தான்.. 'புஷ்பா 2' இசையமைப்பாளர் மாற்றம்.. என்ன நடந்தது?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது திடீரென இசையமைப்பாளர்

150 கோடி மேக்கிங் பட்ஜெட்.. தெலுங்கில் இருந்து வரும் ஹீரோயின்.. வில்லனாகும் மாஸ் நடிகர்.. SK25 தகவல்கள்,..

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்

உங்கள் வாழ்க்கையை மாற்றும் கேளக்கியர் சித்தர் வழிபாடு

கேளக்கியர் சித்தர் வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். திரு. அசோகா ஆஸ்ட்ரோ அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: விஜய் அறிக்கை..!

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன