தமிழக மேதையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: 'ராக்கெட்டரி' படத்தை அடுத்து மாதவன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் மாதவன் அடுத்ததாக தமிழக மேதை ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஜிடி நாயுடு என்பவர் அறிவியல் மாமேதைகளில் ஒருவர் என்பதும் விவசாயம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த பல பொருள்களை அவர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை சேர்ந்த இவர் தனது இளம் வயதிலேயே பல நூல்களை தானாகவே படித்து தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார் என்பதும் வாலிப வயதில் புரட்சிகரமாக இருந்த இவர் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிடி நாயுடு இளம் வயதிலேயே மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்து பல தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டார் என்பதும் அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரவியல், ஊர்தி தொழில், வேளாண்மை உள்பட பல துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தின் மாபெரும் மேதைகளில் ஒருவரான ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதற்கு உரிமையை பெற்றுள்ள நிலையில் இதில் ஜிடி நாயுடு கேரக்டரில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout