நாகார்ஜூனாவை அடுத்து சிக்கலில் சிக்கிய தனுஷ்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,June 25 2024]

சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அவருடன் பேச விருப்பப்பட்ட போது, நாகார்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இதனை அடுத்து நாகார்ஜுனாவுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து வருத்தம் தெரிவித்து, இது போன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது என்றும், இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நாகார்ஜுனா சம்பவத்தின் பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் மும்பையில் உள்ள பீச் ஒன்றில் தனுஷ் படப்பிடிப்புக்கு சென்ற போது ஒரு ரசிகர் அவரை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார். அப்போது தனுஷின் பாதுகாவலர் அந்த இளைஞரை தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கும் தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது

ஏற்கனவே நாகார்ஜுனா சம்பவம் நடந்த போது தனுஷ் அவர் பின்னால் தான் தனுஷ் நடந்து கொண்டு வந்தார் என்பதும் அந்த சம்பவத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனுஷை பார்க்க வந்த இளைஞர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தனுஷ் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.