'நாட்டாமை' படத்திற்கு அப்புறம் இந்த படம் தான்: ரசிகையின் பேச்சால் நெகிழ்ந்து போன நடிகர்!

’நாட்டாமை’ படத்திற்கு பிறகு இந்த படம் தான் பார்க்கிறேன் என பெண் ஒருவர் கூறியதை அடுத்து அந்த படத்தில் நடித்த நடிகர் நெகிழ்ந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர். எனவே இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இன்று கோவையில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்தார். அதன் பின் அவர் பார்வையாளர்களிடம் உரையாடிய போது ஒரு பெண் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தான் தியேட்டருக்கு வந்திருப்பதாகவும் கடைசியாக பார்த்த படம் ‘நாட்டாமை’ என்றும் கூறினார்.

மேலும், ‘உங்கள் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக தியேட்டருக்கு வந்தேன் என்றும் படம் நன்றாக உள்ளது என்றும் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவரது பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த ஆர்ஜே பாலாஜி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டார். இது குறித்த வீடியோ ஆர்ஜே பாலாஜியின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

கமல்ஹாசன் தான் என் ஹீரோ, என் நண்பன்: சொன்ன பிரபல நடிகை யார் தெரியுமா?

'கமல்ஹாசன் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய நண்பர்' என்று பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ரெண்டும் ஒன்றா சாய்பல்லவி? கண்டனம் தெரிவித்த விஜயசாந்தி

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி மத ரீதியிலான சர்ச்சைக்குரிய ஒரு கருத்து தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன

நேற்று வெளியான குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகள் தடை: அதிர்ச்சி தகவல்

நேற்று வெளியான குழந்தைகள் திரைப்படத்திற்கு 14 நாடுகள் தடை விதித்து இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு ரூ.3 லட்சம் அபராதம்!

கார்த்தி ரசிகர்களை தாக்கிய போலீசாருக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? ரஜினியின் 'ஜெயிலர்' பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும்