'மெர்சலை அடுத்து டுவிட்டர் இமோஜியை பெறும் 2 படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பெயரில் டுவிட்டர் இமோஜி பெற்ற ஒரே படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இமோஜி ரசிகர்கள் மற்றும் டுவிட்டர் பயனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் டுவிட்டர் இமோஜியை பெற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த இரண்டு படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' மற்றும் பவன்கல்யாண் நடித்து வரும் 25வது படம் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஒரு திரைப்படத்தை புரமோஷன் செய்வதில் சமூக வலைத்தளங்கள் பெரும்பங்கு வகிப்பதால் வரும் காலத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் உள்பட அனைத்து திரைப்படங்களுக்கும் இமோஜிக்கள் பெறும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.