ரஜினிக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவுமில்லை: அபுபக்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிஏஏ சட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்த் இஸ்லாமிய பிரமுகர்களையும் மத குருமார்களையும் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்பட்டது
இதனையடுத்து இன்று காலை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் ரஜினியின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘சிஏஏ சட்டம் குறித்த ரஜினிக்கு நான் சொல்லி எதுவும் தெரிய வேண்டிய அவசியமில்லை. அவர் சிஏஏ சட்டம் குறித்து நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்
இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பது மட்டுமே அவருடைய நோக்கமாக இருக்கிறது. மதக் கலவரம் ஏற்படக் கூடாது என்பதுதான் அவரது கருத்து. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிஏஏ சட்டம் குறித்து ரஜினிகாந்த் நன்கு தெரிந்து வைத்து இருக்கின்றார். இந்த சட்டம் குறித்து அவர் கூறியதை உள்நோக்கத்துடன் பார்க்கக்கூடாது, அவர் ஒரு லெஜண்ட், அவர் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார்’ என்று கூறியுள்ளார்
ரஜினியை சந்திக்கும் முன்னர் இஸ்லாமிய தலைவர்கள் ரஜினியை விமர்சனம் செய்த நிலையில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே ரஜினியை சந்தித்த பின்னர் அவரை பாராட்டுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout