'மாஸ்டர்', 'பீஸ்ட்' படத்தை அடுத்து 'வாரிசு' படத்திலும் விஜய்யுடன் இணைந்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’வாரிசு’ படத்திலும் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஜானி மாஸ்டர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ‘பீஸ்ட்’ படத்தில் இவரது நடன இயக்கத்தில் உருவான அரபிக்குத்து பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ படங்களை அடுத்து விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்திலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றவுள்ளார். ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஜானி மாஸ்டர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ’மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களை போலவே இந்த படத்திலும் பாடல்களை இவர் ஹிட்டாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Break time clicks from the sets of #Varisu shoot ??✨️ pic.twitter.com/nzXKCrNpAU
— Jani Master (@AlwaysJani) August 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com