திருமணத்திற்கு பின் வெளியாகும் நயன்தாரா படத்தின் முதல் புரமோஷன்!

  • IndiaGlitz, [Monday,June 13 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா நடித்த படத்தின் புரமோஷன் தற்போது வெளிவந்துள்ளது

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’O2’ என்பது தெரிந்ததே. இந்த படம் வரும் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
‘வானம் தாவும்’ என்ற ஆரம்பிக்கும் இந்த பாடலை தரன் என்பவர் எழுத பிரதீப்குமார் பாடியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த மெலடி பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியாகிய பாடலின் சில வரிகள் இதோ:

வானம் யாவும் வாசல் வந்து வாசம் வீசி அழைக்கிறதே
காற்றின் மேலே பறவை போலே இதயம் சேர்ந்து பறிக்கின்றதே

இருள் இருள் உள்ளாறத்தான் ஒளி ஒன்று தங்கியிருக்கும்
மெல்ல மெல்ல பாதைகள் தானாக தோன்றும்

நிதம் நிதம் சந்தோஷத்தை கொட்டி கொட்டி கொண்டாடுவோம்
பட்டாம்பூச்சி முள்மீது எக்காலும் போடும்

நீளும் பாதை வெளியா இடமா காற்றா கடலா தெரியாதே
போகும் பயணம் போகும் போக்கில் அர்த்தம் தந்து அணைக்கின்றதே