திருமணத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமான முதல் படம்: டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்குபின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தேனிலவில் இருக்கும் போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் பயங்கரமாக வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னர் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ’கோஸ்ட்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேண்டசி ஹாரர் படமான இந்த படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 24 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே காஜல் அகர்வால் சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சாரியா’ மற்றும் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2 ’ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? கமல்ஹாசனின் ஆவேச வீடியோ!

சூரப்பா ஆட்சியாளர்களால் வேட்டையாடப்படுவது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

அடுத்தடுத்து ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்… திடுக்கிடும் பின்னணி!!!

நேற்று மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில்  நடைபெற்ற அதிரடி சோதனையால் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்காவில் பேமஸ் ஆன நம்ம ஊரு ரசம்!!! எப்படி தெரியுமா???

கொரோனா நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டல் நிறுவனம் அந்த ஊரின் நோயாளிகளுக்கு இம்யூனிட்டி சூப் எனும் பெயரில் நம்ம ஊரு ரசத்தை பரிமாறியது.

இனி விலங்கை கொல்லாமல்… ரத்தம் சிந்தாமல்… இறைச்சி சாப்பிடலாம்… இறைச்சியில் புது புரட்சி…

இறைச்சி சாப்பிட வேண்டும் என்றால் அதற்காக எதாவது ஒரு விலங்கை கொன்றுதான் ஆகவேண்டும்.

மலைக்க வைக்கும் ஆசிரியப்பணி… ரூ.7 கோடி பரிசுத்தொகை, சர்வதேச விருது பெற்ற இந்தியர்…

உண்மையான மாற்றத்தை ஆசிரியரால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்தில் உறுதிக்கொண்ட ரஞ்சித் டிசாலே எனும் 32 வயது பள்ளி ஆசிரியர் சர்வதேச விருதினை தட்டிச்சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.