திருமணத்திற்கு பின் முதல்முறையாக சென்னை வந்த ஹன்சிகா.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

நடிகை ஹன்சிகாவுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் திருமணத்திற்கு பின் முதல் முறையாக சென்னை வந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது நீண்ட கால நண்பரான சோஹைல் கதுரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹன்சிகாவின் திருமண வீடியோ விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் இது குறித்த டீசர் வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதல் முறையாக நடிகை ஹன்சிகா சென்னை வந்துள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எப்போதும் சென்னைக்கு வந்தாலும் எனது அம்மா வீட்டுக்கு வருவது போல் மகிழ்ச்சியாக இருக்கும், தற்போது படப்பிடிப்புக்காக சென்னை வந்து உள்ளேன், இந்த ஆண்டு மட்டும் என் கைவசம் 7 படங்கள் உள்ளது, இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியான ஆண்டு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது, நான் என்னுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் காரணமாக தனக்கு வரும் பட வாய்ப்புகள் குறையவில்லை என்றும் தற்போது ஏழு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ரௌடி பேபி’ விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கார்டியன்’ மற்றும் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் டைட்டில் வைக்கப்படாத திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.