14 ஆண்டுகளுக்கு பின் சிம்பு-ஜோதிகா இணணயும் இரண்டு படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் 'சரவணா' மற்றும் 'மன்மதன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இவற்றில் 'மன்மதன்' திரைப்படத்தை சிம்புவே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா 'செக்க சிவந்த வானம்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படம் 'காற்றின் மொழி' என்பது தெரிந்ததே. இந்த படம் பாலிவுட்டில் வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'துமாரி சூலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சிம்பு, ஜோதிகா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைந்துள்ளது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு உற்சாகமான செய்தி என்பதில் சந்தேகம் இருக்காது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments