மாலத்தீவை அடுத்து ஆன்மீக பயணம்.. ரஜினிகாந்த் எங்கே செல்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்ற நிலையில் அடுத்ததாக ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் திசையில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளார்.

இதனை அடுத்து ரஜினிகாந்த் சமீபத்தில் மாலத்தீவுக்கு ஓய்வெடுக்க சுற்றுலா சென்ற நிலையில் அடுத்ததாக ஆன்மீக பயணமாக இமயமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் இமயமலை செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் ஒரு வாரம் தங்கி பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இமயமலை செல்லும் போது அவரது மகள்களில் ஒருவர் உடன் சென்ற நிலையில் இந்த முறை அவர் தனியாக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததும் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ரஜினிகாந்த் சமீபத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு மற்றும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அவர் இமயமலை செல்லவில்லை. இந்த நிலையில் இந்த நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் இமயமலை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.