மகேஷ்பாபு, த்ரிஷாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகரின் மகளுக்கு கொரோனா பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் மகேஷ்பாபு, நடிகர் சத்யராஜ், நடிகை திரிஷா, இசையமைப்பாளர் தமன் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டும் ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் பின் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்பாபுவின் மகளும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை லட்சுமி மஞ்சு தமிழில் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ மற்றும் ஜோதிகா நடித்த ’காற்றின் மொழி’ ஆகிய திரைப்படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட லட்சுமி மஞ்சு விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments