'மாவீரனை' அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த 2 படங்களின் மாஸ் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டூடியோ விரைவில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டுகள் வர இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 22வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு விரைவில் ’எஸ்கே 22’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Happy birthday dear brother! You will win more hearts this year & we will watch your Tribe grow!
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 17, 2023
And for all the fans asking for updates: Wait for it, Your @Siva_Kartikeyan is “gearing” up. This will be worth your wait! #HBDSivakarthikeyan pic.twitter.com/Tn2cjQJ9RC
Wishing our #Hero of entertainment✨, the #Doctor of humour🎉and a star with mass-fandom a fantastic year ahead🔥
— KJR Studios (@kjr_studios) February 16, 2023
Happy Birthday dear @Siva_Kartikeyan. Here's to more success and feats♥️#HappyBirthdaySivakarthikeyan #HBDSivakarthikeyan #HBDSK #HBDPrinceSK #KJRStudios pic.twitter.com/HqZyaEMlUK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments