'மாரி 2'வை அடுத்து ரிலீசுக்கு தயாரான தனுஷ் படம்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நீண்ட காலதாமதம் ஆன தனுஷின் இன்னொரு படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையில் உருவான இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பேட்ட' இசை வெளீயீடு: முக்கியமானதை மறந்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள இன்னொரு படமான 'பேட்ட' வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும்

குரலே இல்லாதவங்க கேள்வி கேட்கணும்ன்னா...'வெல்வெட் நகரம்' டிரைலர் விமர்சனம்

நடிகை வரலட்சுமி நடித்த 'வெல்வெட் நகரம்' படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? திடீரென பரவும் வதந்தியால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வதந்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபரை ஒரே நிமிடத்தில் பிரபலமாக்கிய நடிகை

வாட்ஸ் மூலம் பிரபல நடிகை ஒருவரை ஒருநாள் இரவுக்கு அழைத்த வாலிபர் ஒருவரை அந்த நடிகை உலகிற்கே அடையாளம் காட்டி பிரபலமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.