மீண்டும் இணையும் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா: இயக்குனர் இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ’மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்து இருந்தனர் என்பதும் இருவரின் நடிப்பிற்கு விமர்சகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் டிரைவிங் லைசென்ஸ். பிரித்விராஜ் மற்றும் சூரஜ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் 4 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 22 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் பிரித்விராஜ்-சூரஜ் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்க இருப்பதாகவும், இவர் ஏற்கனவே சிம்பு நடித்த ’வாலு’ மற்றும் விக்ரம் நடித்த ’ஸ்கெட்ச்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மலையாளத்தில் தயாரித்து நடித்த நடிகர் பிருத்விராஜ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
’மாநாடு’ திரைப்படத்தை அடுத்து சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மீண்டும் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments