லைகா, கமல்ஹாசனை அடுத்து சிவகார்த்திகேயன் எச்சரிக்கை: என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் போலியாக நட்சத்திரங்கள் தேர்வு செய்வதாக கூறி, பணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வகையான அறிவிப்புகளை உண்மை என நம்பி, பெரிய நிறுவனங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே லைகா நிறுவனம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் அதே போன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
"எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜென்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாக தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள், அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kind attention, everyone! pic.twitter.com/xLc7R0t2cE
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) October 2, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments