லாக்டவுனுக்கு பின் நடிகைகளின் சம்பளம்: நயன்தாராவுக்கு எவ்வளவு?

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை ஈடுகட்ட மாஸ் ஹீரோக்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாஸ் நடிகர்களின் சம்பள குறைப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் தற்போது நடிகைகளின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல்களை வெளிவந்த தகவல்களை தற்போது பார்ப்போம். இதன்படி நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி என்றும், காஜல் அகர்வாலின் சம்பளம் ரூ.2 கோடி என்றும், த்ரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகியோர்களின் சம்பளம் ரூ.1.50 கோடி என்றும் ஸ்ருதிஹாசனுக்கு ரூ. 1 கோடி என்றும் கூறப்படுகிறது

கீர்த்தி சுரேஷ் 80 லட்சம் ரூபாய், அஞ்சலி 70 லட்சம் ரூபாய், ரெஜினா 60 லட்சம் ரூபாய், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர்களுக்கு ரூ.40 லட்மும், நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர்களின் ரூ. 35 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது