3 மாதம் லிவிங் டுகெதர்.. அப்புறம்தான் கல்யாணம்.. டிடிஎப் வாசன்..

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

பைக்கில் செல்லும் போது வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதம் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு அதன் பிறகு தான் திருமணம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பைக்கில் வீலிங் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமான டிடிஎப் வாசன், சமீபத்தில் ’மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதையடுத்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் சாகசம் செய்தார். அப்போது அவர் எதிர்பாராத விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உட்பட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீண்ட முயற்சிக்கு பின்னர் அவருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளார்

இந்த நிலையில் சிறையில் இருக்கும் போது தனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் மூன்று மாதம் ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதரில் இருந்து விட்டு அதன் பின்னர்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் ஏனென்றால் நான் லைப்பில் நிறைய பார்த்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.