'எல்.ஐ.சி' படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் இன்னொரு படம்.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

  • IndiaGlitz, [Tuesday,December 19 2023]

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த ’லவ் டுடே’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நட்சத்திரமாக மாறி உள்ளார்.

ஏற்கனவே அவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’எல்ஐசி ’என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை உடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அசோக் செல்வன் நடித்த ’ஓம் மை கடவுளே’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்ஐசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

3 நாளில் இத்தனை கோடி வசூலா? இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஃபைட்கிளப்'

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான 'ஃபைட்கிளப்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக

எப்படியாவது மீட்புப்பணியை மேற்கொள்ளுங்கள்: தென்மாவட்ட வெள்ளம் குறித்து பிரபல இயக்குனர்..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் காரை தாக்கிய ரசிகர்கள்: அதிர்ச்சி வீடியோ..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர் காரை ரசிகர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிர்வாகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமினேஷனில் வெறும் 3 போட்டியாளர்கள் மட்டுமே? திட்டம் போட்டு காப்பாற்றப்படுகிறார்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் வெறும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே

ஒரு சீனில் கூட ரஜினி இல்லாமல் 7 நிமிடங்கள்..  'லால் சலாம்' படத்தின் 'தேர்த்திருவிழா' பாடல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம்  வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் 'தேர்த்திருவிழா' சிங்கிள்